TamilFOSS

கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்

Register or log in - lost password?

TamilFOSS » லினக்ஸ் (GNU/Linux) » உபுண்டு

திற மூல இந்திய விசைப்பலகை

(4 posts) (2 voices)
  • Started 10 months ago by ரவி
  • Latest reply from கா. சேது | K. Sethu
  • Related Topics:
    1. உபுண்டு 9.04 இல் தமிழ்99 விசைப்பலகை இயக்கியினை நிறுவுவது எ
    2. உபுண்டுவில் ஷ
    3. உபுண்டு 9.10 ல் தமிழ்
    4. உபுண்டு மென்பொருள்களில் தமிழ் இடைமுகப்பு
    5. உபுண்டுவில் தமிழ் எழுத்துருக்கள்

Tags:

  • debian installer
  • http://ujiladevi.blogspot.com
  • உபுண்டு
  • தமிழ்
  • விசைப்பலகை
  1. ரவி
    Key Master

    http://code.google.com/p/indic-keyboards/downloads/list

    பக்கத்தில் காணப்படும் திறமூல இந்திய விசைப்பலகைகள் மென்பொருளுக்கு யாராவது ஒரு டெபியன் நிறுவி உருவாக்கித் தர முடியுமா?

    மயூரன், அமாச்சு, சேது?

    நன்றி,

    ரவி

    Posted 10 months ago #
  2. கா. சேது | K. Sethu
    Administrator

    டெபியன் நிறுவி ஆக்கத் தேவையில்லை. அநேகர் பயன்படுத்தும் 32-bit architecture இயங்குத்தளங்களுக்கு indic-keyboards-0.1-linux-x86.tar.gz பொதி பின்னர் வந்த 64-bit architecture பயன்படுத்தின் indic-keyboards-0.1-linux-x86_64.tar.gz பொதி, என வழங்கப்படும் இரண்டில் பொருத்தமான ஒன்றைத் தரவிறக்கி அப் பொதியை விரிவாக்க வேண்டும். தங்கள் இல்ல அடைவிலே விரிவாக்கலாம். உருவாகும் உள்ளடைவினுள் இருக்கும் .jar கோப்பை இயக்குகையில் விசைப்பலகை மேல்வரும். இயக்குவதற்குத் கட்டகத் தேவைகள் உள்ளன. அவை நம் கணினியில் நிறுவப்பட்டுள்ளனவா என்பனவற்றை சோதிக்கவும் முடியும். (தேவை ஒன்று நிறுவபட்டிருக்காவிடின் இதை நிறுவ வழிகளைப் பார்க்க வேண்டும்)

    மேற்குறிப்பானது ஒரு சுருக்க மற்றும் துரித மறுமொழி. அதில் குறிப்பிட்ட பணிகளுக்கானப் படிகளை அடுத்த பதிவில் இடுவேன்.

    விண்டோ மற்றும் லினக்சு ஆகிய இரண்டிலும் இயங்கக் கூடியதாகவும் கட்டற்ற மென்பொருளாகவும் இது வெளிவருவதை இட்டு மகிழ்ச்சி அடைவதில் நானும் ஒருவன். பல மாதங்கள் முன்னிருந்தே பதிவிறக்கங்கள் வெளியிடப்பட்டு வந்த போதும் சென்ற மாததித்திலே மாற்றங்கள் பல ஏற்பட்டு முன்னர் விட பயனர் சோதனைகளுக்கு கூடுதல் பொருத்தமாகி உள்ளது.

    ஆனால் இது தவழுதுதலை விட்டு நடக்க முனைகையில் கால்கள் தடுமாறி பதற்றமடையும் பருவத்தைத் தான் இதுவரை வந்தடைந்துள்ளது எனக் கருதுகிறேன். அவ்வாறு நான் நினைப்பது உபுண்டு-கருமிக் மற்றும் விண்டோ இயங்குதளங்களில் நேற்று சில சோதனைகள் செய்த பின்னர்தான்.

    இக் கட்டற்ற விசைப்பலைகை முயற்சியை வளப்படுத்தி வளர்க்க உந்து சக்தியாக இயங்குவதற்கு கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் இன்னும் பலர் முன்வர வேண்டும் எனக் கருதுகிறேன்.

    ~சேது

    Posted 10 months ago #
  3. ரவி
    Key Master

    இம்மென்பொருளை உபுண்டுவில் இயக்குகையில் நானும் சில குறைகளைக் கண்டேன். ஆனால், புதிய மென்பொருளுக்குப் பரவாயில்லை. இன்னும் மேம்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். நாமும் பங்கெடுக்கலாம்.

    மென்பொருள் உதவிப் பக்கத்தில் குறிப்பிட்ட படியே நிறுவலை மேற்கொண்டேன். ஆனால், தொடக்க நிலைப் பயனருக்கு இது சற்று அயர்வளிக்கலாம். ஒரே சொடுக்கில் தேவையான எல்லாமே தானாக நிறுவுவது போல் இருந்தால் நல்லா இருக்கும். தபுண்டு மூலம் இதைச் செய்ய இயலுமா?

    Posted 10 months ago #
  4. கா. சேது | K. Sethu
    Administrator

    ஒரே சொடுக்கில் தானாக நிறுவ shell script எழுதி அதை தபுண்டுவினூடு தானியக்கமாக இயக்கலாம். கூடவே மேசைத்தளத்தில் அல்லது பலகத்தில் துரிதத்தொடுப்பு ஓவத்தையும் சேர்த்து விடவும் செய்யலாம்.

    Posted 10 months ago #

RSS feed for this topic

Reply

You must log in to post.

TamilFOSS is proudly powered by bbPress.