இன்றே இத்தளத்தில், இரவியால்(தமிழ் விக்கிப்பீடியா அதிகாரி) இணைகிறேன். நான் தமிழகத்தில், சேலம் மாவட்டத்தில் வசிக்கிறேன். தமிழ் (விக்சனரியில்)அகரமுதலியியலில் ஆர்வமுடையவன். நான் உபுண்டு 9.04 நிறுவியுள்ளேன். இதில் இணைய இணைப்பை ஏற்படுத்துவது எப்படி? இந்த ip எண்களை
192.168.192.42 கொடுக்கும் போது வின்டோசு-எக்சுபி யில் எடுக்கிறது. உபுண்டுவில் இணைய இணைப்பைப் பெறுவது எப்படி?
இந்த இணைய இணைப்பானது வீட்டின் மேலே ஒரு அலைவாங்கியின் மூலம் பெற்று, அதனை ஒரு இணையமின்வடம் மூலம் கணினியுடன் இணைக்கின்றனர். அலைமாற்றி (modem) எதுவும் இல்லை. கணினியுடன் இணைத்து விட்டு, பின்வரும் விவரங்களைக் கொடுத்தவுடன், இணைய இணைப்பு (வின்டோசில்-எக்சுபி) கிடைக்கிறது.
மேலும் சில விவரங்கள் (TCP/IP properties): subnet mask:255.255.255.0 - default gateway:192.168.192.1 - preferred DNS server:202.56.250.6 - alternate DNS server:202.89.66.2
10தினங்களாக அடிப்படைத் தெரியாததால், சிரமப் படுகிறேன். விளக்கங்களை எதிர் பார்த்து முடிக்கும், த*உழவன். வணக்கம்.