TamilFOSS

கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்

Register or log in - lost password?

TamilFOSS » லினக்ஸ் (GNU/Linux) » உபுண்டு

உபுண்டு 9.10 ல் ஸ்கைப்பு

(2 posts) (2 voices)
  • Started 4 months ago by karthickbala
  • Latest reply from கா. சேது | K. Sethu
  • Related Topics:
    1. உபுண்டு 9.10ல் டிராப்பாக்சு
    2. உபுண்டு 9.10 ல் தமிழ்
    3. உபுண்டு வில் ஸ்கைப் (skype) பிரச்சினை?
    4. Skype - web cam - ubuntu
    5. உபுண்டுவில் இயல்பிருப்பாக தமிழ்99

Tags:

  • .deb பொதி நிறுவல்
  • dpkg கட்டளை
  • skype
  • ubuntu
  • உபுண்டு 9.10
  • ஸ்கைப்பு
  1. karthickbala
    Member

    நண்பர்களே,
    யாராவது உபுண்டு 9.10ல் ஸ்கைப்பை நிறுவியுள்ளீர்களா? என்னால் நிறுவமுடியவில்லை உதவி செய்யவும் :(

    நன்றி
    கார்த்திக்

    Posted 4 months ago #
  2. கா. சேது | K. Sethu
    Administrator

    ஆம் நிறுவியிருக்கேன்.

    http://www.skype.com/download/skype/linux/choose/ பக்கத்தில் பழைய Ubuntu 8.10 க்காக 32-bit மற்றும் 64-bit களுக்காக "Ubuntu 8.10+ 32-bit", "Ubuntu 8.10+ 64-bit" என இரு தொடுப்புக்கள் உள்ளதைப் பாருங்க. நான் 32-bit பயன்படுத்துவதால் அதற்கான தொடுப்பு சொடுக்கி வரும் skype-ubuntu-intrepid_2.1.0.47-1_i386.deb பொதி நிறுவினேன்.

    அது பழைய 8.10 க்கான வெளியீடாயினும் 9.10 இலும் வேலை செய்கிறது.

    தாங்கள் 32-bit, 64-bit architecture களில் எதைப் பயன் படுத்துகிறீர்களோ அதற்கான பொதியை பதிவிறக்கி நிறுவுங்கள்.

    ஒரு பதிவிறக்கப் பட்ட ஒரு .deb பொதியை நிறுவுதற்கான வழிகள்:
    ===============================================

    I. கட்டளைவரி (CLI) வழியாக :
    -------------------------------------------

    ஒரு முனையத்தை திறவுங்கள். அதில் பின்வரும் வடிவில் ஆணையை இடுங்கள் :

    sudo dpkg -i <path-to-dir-having-downloaded-package>/filename.deb

    எடுத்துக்காட்டாக எனது கணிமேசை (Desktop) இல் பதிவிறக்கியுள்ள skype-ubuntu-intrepid_2.1.0.47-1_i386.deb பொதியை நிறுவ :

    sudo dpkg -i ~/Desktop/skype-ubuntu-intrepid_2.1.0.47-1_i386.deb

    தங்கள் கடவுச் சொல்லை கேட்கையில் தட்டச்சிடுங்கள்

    II. வரைகலை இடைமுகப்பு (GUI) வழியாக :
    -------------------------------------------------------------

    Places (இடங்கள்) --> Home Folder (இல்ல அடைவு) சொடுக்கி எழுப்பும் கோப்பு உலாவி செயலி ஆனது Nautilus என்ற பெயருனைய ஒரு file manager. அதில் பதிவிறக்கப்பட்ட .deb பொதியை இருக்கும் அடைவினுள் சென்று அந்த .deb கோப்பை சொடுக்க எழும் Package Installer செயலியில் வரும் வழிகாட்டிகளை பின்பற்றி நிறுவுங்கள். இதிலும் தங்கள் கடவுச் சொல்லை கேட்கையில் தட்டச்சிடுங்கள்.

    ~சேது

    Posted 4 months ago #

RSS feed for this topic

Reply

You must log in to post.

TamilFOSS is proudly powered by bbPress.