"This computer is currently using the AMD 'fglrx' graphics driver. No version of this driver is available that works with your hardware in Ubuntu 9.04." என்பதை கூகிள் தேடலில் இட்டு வரும் விடைப்பக்கங்கள் பலவற்றினுள் அத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் உள்ளனவா என்பதைத் தேடிப்பாருங்கள்.
எனது கூகிள் தேடலில் முதலாவதாகச் சுட்டப்படுவது பின்வரும் உபுண்டு மன்ற உரையாடல்
http://ubuntuforums.org/showthread.php?p=7147448
தாங்கள் 9.04 க்கான இறுவட்டை பதிவிறக்கியோ வேறு யாரிடமோ இருந்து இயலுமாயின் பெற்றோ அப் பக்கத்தில் குறிப்பிடப்பட்ட ஓர் ஆலோசனைப்படி நிகழ் வட்டு (Live CD - வன்தட்டில் நிறுவாமல்) அமர்வை ஏற்படுத்தி 3-D வரைகலை துணையற்ற நிலையில் நடத்தப்படக்கூடிய பயன்பாடு தங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதைப் பாருங்கள்.
வன்தட்டில் வேறு பகிர்வு (partition) ஆக்க இடமிருப்பின் 8.10 ஐ அப்படியே வைத்துக்கொண்டு 9.04 ஐ தனியாக அந்த இறுவட்டு பயன்படுத்தி நிறுவிப் பார்க்கலாம். அது போதுமெனத் தோன்றின் 8.10 இலிருந்து தாங்கள் ஆக்கியுள்ள தரவுகள் ஆவணங்கள் எல்லாம் 9.04 க்கு படி எடுத்து சேர்க்கலாம்.
8.10 ஐத்தான் 9.04 க்கு மேம்பாடு செய்ய முடிவெடுப்பின் ஆக்கியுள்ள தரவுகள் மற்றும் ஆவணங்களில் தேவையான எல்லாவற்றையும் முதலில் வேறு பகிர்வில் அல்லது flash drive, cd போன்றவற்றில் ஒன்றில் காப்பு (backup) செய்து கொள்ளுங்கள்.
//எல்லோரும் .10 க்கு மாறிக்கொண்டிருக்க இவனொருத்தன் இப்பதான் 04 பற்றி கேட்கிறதாக குறைநினைக்கக் கூடாது.//
அவ்வாறு தாங்கள் கூச்சப்பட வேண்டாம். 9.04 (Jaunty) க்கு இன்னும் ஒரு வருட காலம் உபுண்டு நடத்துனர்களின் துணை உள்ளது. எனவே அதைப் பற்றிய வினாக்களுக்கு தெரிந்த பதில்களைத் தெரிவிப்பது என்னைப் போன்ற உபுண்டு பயனர்கள் / ஆர்வல்கள் கடமை எனக் கருதுகிறேன்.
~சேது