உபுண்டுவில் skype பயன்படுத்தும்போது பலருக்கு பிரச்சினைகள் உருவாகிறது.
முக்கியமானது problem in sound device என்கிற வழுச்செய்தி. இதற்கு தீர்வு என்ன? வேறு என்ன பிரசிச்னைகள் வருகிறது?
உபுண்டுவில் skype பயன்படுத்தும்போது பலருக்கு பிரச்சினைகள் உருவாகிறது.
முக்கியமானது problem in sound device என்கிற வழுச்செய்தி. இதற்கு தீர்வு என்ன? வேறு என்ன பிரசிச்னைகள் வருகிறது?
பொதுவான இந்தப்பிரச்சினை 2 காரணங்களால் உண்டாகிறது.
1. pulseaudio சேவை busy ஆக இருப்பதால்
2. சரியான முறையில் ஒலிச்சாதனங்களை அமைத்துக்கொள்ளாததால்.
முதலாவது அநேகமாக உபுண்டுவின் வழுவாக இருக்க வேண்டும். இதற்குத் தற்காலிகத்தீர்வாக "killall pulseaudio" என்ற ஆணையை முதலில் செயற்படுத்திவிட்டு பின்னர் ஸ்கைப்பை தொடக்கலாம். அல்லது system monitor இல் pulseaudio வினை தேடி kill செய்துவிட்டு பின்னர் ஸ்கைப்பை தொடக்கலாம்.
இரண்டாவது பிரச்சினை அவரவர் ஒலிச்சாதனங்களில் தங்கியுள்ளது.
நான் அமைத்துள்ள முறைய இங்கே பார்க்கலாம்.
http://file.status.net/identica/mauran-20091001T013450-uyghltv.png
வணக்கம்...
உங்கள் தளம் நன்றாக, பயனுள்ளதாக உள்ளது...
என் வாழ்த்துக்கள்...
நான் உபுண்டு 9.04 பயன்படுத்துகிறேன்...
skype எப்போது login செய்தாலும் "Another instance is already running" என்கிற பிழை செய்தி தான் வருகிறது...
system monitor இல் பார்த்தாலும் ஒரு skype process தான் உள்ளது...
windows XP இல் எந்த பிரச்சனையும் இன்றி பயன்படுத்தமுடிகிறது...
தீர்வு ???
நன்றிகள் பல...
System (அமைப்பு) --> Administration (நிர்வாகம்)--> Users and Groups (பயனீட்டாளர்கள் மற்றும் குழுக்கள்) ஆணைகள் தொடர் வழியாக ஒரு புது பயனர் ஏற்படுத்துங்கள். தாங்கள் அமர்விலிருக்கும் பயனர் கணக்கிலிருந்து விடுபதிகை செய்து ஏற்படுத்திய புதிய பயனர் கணக்குக்குப் புகுபதிகை செய்து புதிய அமர்வு தொடக்குங்கள். அவ் அமர்வில் skype இயக்கி தங்களது skype பயனர் கணக்கில் புகுபதிகை செய்ய முயலுங்கள். அவ் அமர்வில் பிரச்சினைகள் இன்றி skype பாவிக்க இயலுகிறதா அல்லது தாங்கள் கண்ட அதே வழு அறிக்கை தோன்றுகிறதா அல்லது வேறு ஏதாவது பிரச்சினை ஏற்படுகிறதா என்பதைப் பற்றி இங்கு தெரிவியுங்கள். அதன் பின் மேற்கொண்டு அலச முற்படுவோம்.
skype போடுவதற்கு முன் movie playerல் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தால், problem with audio playback என்று வருகிறது. கணினியை மீளத் துவக்கி முதலிலேயே skype போட்டால் தான் வேலை செய்கிறது. சில வேளை, ஒருவரிடம் பேசி விட்டு அடுத்தவருக்கு அழைக்கும் போது திரும்பவும் இந்த பிழைச் செய்தி வருகிறது. எப்படி சரி செய்வது? நன்றி.
You must log in to post.