TamilFOSS

கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்

Register or log in - lost password?

TamilFOSS » லினக்ஸ் (GNU/Linux) » உபுண்டு

உபுண்டு ஒலிவாங்கி

(4 posts) (2 voices)
  • Started 8 months ago by ரவி
  • Latest reply from ரவி
  • Related Topics:
    1. AWBயை உபுண்டுவில் பயன்படுத்துவது எப்படி?
    2. உபுண்டுவில் இயல்பிருப்பாக தமிழ்99
    3. உபுண்டு9.04இல் இணைய இணைப்பைப் பெறுவது எப்படி?
    4. உபுண்டுவில் ஷ
    5. உபுண்டு 9.10ல் டிராப்பாக்சு

Tags:

  • அமைப்புக்கள்
  • ஒலிபெருக்கி
  • ஒலிவாங்கி
  1. ரவி
    Key Master

    உபுண்டு 9.10. ஒலிவாங்கி வேலை செய்வதாகத் தெரியவில்லை. sound recorderல் போய் முயற்சி செய்தால் ஒலி பதிய மாட்டேன் என்கிறது. இதனால் skypeம் பயன்படுத்த முடியவில்லை. உபுண்டு 9.04லும் இந்தப் பிரச்சினை இருந்தது.

    பல ஆங்கில உதவிப் பக்கங்களையும் படித்து முயன்று களைத்து விட்டேன் :(

    உதவ வேண்டுகிறேன். நன்றி.

    Posted 8 months ago #
  2. கா. சேது | K. Sethu
    Administrator

    முதல் படியாக மேல் பலகத்தில் வலது பக்கத்தில் உள்ள ஓவங்களுள் ஒலிப்பெருக்கி படத்துடன் உள்ளதை சுட்டியின் வலது பொத்தான் சொடுக்கி அதில் வரும் Sound Preferences உரையாடல் பெட்டகத்தினுள் மாற்றக் கூடிய தேர்வுகளை அவதானித்துள்ளீர்களா ?

    அப் பெட்டகத்தில் "Input" தத்தலை சொடுக்கி வரும் தேர்வுகளில் Microphone 1 க்கு ஒலி அளவை முன்னிருப்பு un-amplified நிலையில் இருந்து கூட்டுங்கள். இப்போது ஒலி பதிகிறதா என சோதியுங்கள். தேவையான அளவிற்கு கூட்டி குறையுங்கள் (testing testing, 1,2,3... ;>)

    அப்படியும் மாற்றம் இல்லை எனில் அதே உரையாடல் பெட்டகத்தில் Microphone 2 க்கு ஒலி அளவு மாற்றி பாருங்கள்.

    Casing இல் பின்புறம் Mic 1 க்கான port பிங் நிறமானது இப்படத்தில் போல. http://h10025.www1.hp.com/ewfrf/wc/document?lc=en&dlc=en&cc=us&docname=c00820226

    நடுவில் ஒலிபெருக்கி port பச்சை.

    அதற்கடுத்த நீல நிறமானது line-in. இந்த Line-in பயன்படுத்துவது radio, cd, dvd, gramphone(!) போன்ற புறக் கருவி ஒன்றிலிருந்து உள் வாங்க. அதில் தாங்கள் ஒலிவங்கியை இணைத்திருப்பின் பிங்கிற்கு மாற்றுங்கள்.

    நான் வழமையாகச் சிக்கனமாக வாங்கும் casing கள் போல இருந்தால் இந்த நிறங்கள் எல்லாம் பூசப் பட்டிருக்காது. ;)

    Mic 2 என்பது இலகுவாகச் சொருக சில casing களில் முன் அல்லது ஒரு பக்கத்தில் இருக்கும் port இல் இணைப்பதற்காக இருக்கலாம்.

    இந்த 5-channel, surround, hi-fi என்றெல்லாம் ஏதேதோ சொல்கிறார்களே - அதெல்லாம் எப்படி இயங்குகின்றன என்பன நமக்கு அவ்வளவு தெரியாதுங்க!

    ~சேது

    Posted 8 months ago #
  3. கா. சேது | K. Sethu
    Administrator

    நான் எழுதியது :

    //நான் வழமையாகச் சிக்கனமாக வாங்கும் casing கள் போல இருந்தால் இந்த நிறங்கள் எல்லாம் பூசப் பட்டிருக்காது. ;)//

    அது தவறு. ports உள்ளன motherboard அல்லது soundcard இல்தான். அநேகமாக அவைகள் எல்லாவற்றிலும் அம் 3 நிறங்கள் பூசப்பட்டிருக்கும். ஏதோ மறதியில் தவறாக எழுதியுள்ளேன்.

    ~சேது

    Posted 8 months ago #
  4. ரவி
    Key Master

    Microphone 2 வுக்கு மாற்றிய பிறகு ஒலிவாங்கி வேலை செய்கிறது :) ரொம்ப நன்றிங்க.

    இனி skypeல் எப்படி பேசுவது என்று மற்ற இழைகளைப் பார்த்து முயல்கிறேன்.

    Posted 8 months ago #

RSS feed for this topic

Reply

You must log in to post.

TamilFOSS is proudly powered by bbPress.