உபுண்டுவில் இனி வரும் வெளியிடுகளில் இயல்பிருப்பாக தமிழ்99 விசைப்பலகை முறையை கொண்டு வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உபுண்டுவில் இயல்பிருப்பாக தமிழ்99
(3 posts) (2 voices)-
Posted 5 months ago #
-
தமிழ்99 ஐ இயல்பிருப்பாகக் கொண்டு வருவது என்கையில் தாங்கள் எதைக் கருத்தில் கொண்டு குறிப்பிடுகிறீர்கள் என விளங்கவில்லை. சற்று தெளிவாக்கி விளக்கும் படி வேண்டுகிறேன்.
Posted 5 months ago # -
எனது மடிக்கணினியில் உபுண்டு-9.10 யை குனோம், கேடியி, எக்ஸ்எஃப்சியி இடைமுகப்புடன் பயன்படுத்துகிறேன். உபுண்டு நிறுவும் போது முதன்மை மொழியாக தமிழைத் தேர்ந்தெடுத்து நிறுவினாலும் நேரடியாக தமிழ்99 முறையில் நமது தமிழை உள்ளிட இயலவில்லை. இதற்கு scim-m17n பொதிகளை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டியுள்ளது. உபுண்டுவில் இயல்பிருப்பாக தமிழ்99 விசைப்பலகை முறை என்று நான் குறிப்பிடுவது நாம் உபுண்டுவை தமிழை முதற் மொழியாக கொண்டு நிறுவும் போது விசைப்பலகை முறைக்கு தமிழ்99யை தேர்ந்தெடுப்பதை குறிப்பிடுகிறேன்
Posted 5 months ago #
Reply
You must log in to post.